Koneswaram Sivarathri Oor Valam 2012 photos
ஊர்வலம் 2012
February 22, 2012
Koneswaram, Trincomalee, Sri Lanka
மகா சிவராத்திரியை தொடர்ந்து திருகோணமலையில் பிரெட்ரிக் கோட்டையினுள் அமர்ந்துள்ள கோணேஸ்வர பெருமான் மாதுமை அம்பாள் சமேதரராக ஐந்து நாள் திருகோணமலை நகர் வலம் செவ்வாய்க்கிழமை (21-02-2012) ஆரம்பிக்கப்பட்டது.
பிரெட்ரிக் கோட்டைக்குள் கோணேசர் கோயிலிலிருந்து புறப்பட்டு கோட்டை வாயிலின் ஊடாக நகருக்குள் கோணேஸ்வர பெருமான் பிரவேசித்து நகர் வலம் வந்தார்.
கோணேஸ்வர பெருமான் முதல் நாள் பாலையூற்று முருகன் ஆலயத்திலும் இரண்டாம் நாள் உவர்மலை துர்க்கை அம்மன் ஆலயத்திலும் மூன்றாம் நாள் சிவன் கோயிலிலும் நான்காம் நாள் பத்திரகாளி அம்பாள் ஆலயத்திலும் தங்கியிருந்து ஐந்தாம் நாள் மீண்டும் கோணேசர் கோயிலை சென்றடைவர்.