Maha Sivaraathiri 2012 photos
மகா சிவராத்திரி 2012
February 21, 2012
Koneswaram, Trincomalee, Sri Lanka
வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை மாதுமை அம்பாள் சமேத திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் நேற்று திங்கட்கிழமை மஹா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக அனுஷ்டிக்கப்பட்டது.
நான்கு சாமப் பூசைகள் இடம்பெற்றதுடன் இலிங்கோற்பவருக்கு விசேட அபிசேகமும் இடம்பெற்றது. அடியார்கள் சிவலிங்கத்துக்கு தமது கைகளால் அபிசேகம் செய்தனர்.
அத்துடன் சிவராத்திரியை சிறப்பிக்குமுகமாக ஆலய முன்றிலில் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து இலட்சக்கணக்கானோர் கோணேஸ்வரத்தில் குவிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.