Sivan statue Opening photos
சிவன்சிலை திறப்பு விழா
December 15, 2011
Koneswaram, Trincomalee, Sri Lanka
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்துக்களின் புனிதத்தலமான திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 33 அடி உயரமான சிவனின் சிலை இன்று(15-12-2011) காலை 10.35 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுச்சிறப்புடைய இந்த ஆலயத்தில் இராவணன்வெட்டுக்கு அருகில் புதியதொரு தியான மண்டபமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பெரிய லிங்கமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை திறப்பு விழா நிகழ்வில் பெரியார்களான காந்தி ஐயா, கணபதிப்பிள்ளை உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.