Kodiyeta Thiruvilaa photos
கொடியேற்றத் திருவிழா
July 19, 2012
Koneswaram, Trincomalee, Sri Lanka
பாடல்பெற்ற தலமான திருக்கோணேஸ்வராலயத்தில் அருள்மிகு மாதுமையம்பாள் ஆடிப்பூர வருடாந்த மகோற்சவம் சனிக்கிழமை கொடியேற்ற வைபவத்துடன் ஆரம்பமானது.
பத்துத் தினங்கள் தினமும் திருவிழா நடைபெற்று பின்னர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை எட்டு மணிக்கு சித்திரத்தேர்த் திருவிழாவும் மறுநாள் காலை பாபநாசத் தீர்த்தக் கிணற்றில் தீர்த்தத் திருவிழாவும் நடைபெறும்.
கொடியேற்ற வைபவத்தின் போது கொடியேற்றப்படுவதையும் மாதுமையம்பாள் எழுந்தருளியிருப்பதையும் இன்று ஞாயிற்றுக்கிழமை திருவிழாவின்போது அம்பாள் உள்வீதி மற்றும் வெளிவீதி உலா வருவதையும் படங்களில் காணலாம்.